| Proverbs |
English Translation
|
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
The beauty of the soul is known in the face.The face is the index of the mind.
|
| அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள் |
He who is unable to reap, carries fifty-eight sickles at his side
|
| அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா? |
Having placed the thing on the palm, why lick the back of the hand?
|
| ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆறப் பொறுக்கலை |
He waited for the food to cook, but couldn't wait for it to cool down
|
| ஆழம் தெரியாமல் காலை வைக்காதே |
Don't wade in without knowing the depth
|
| ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும் |
The Mudaliyar has only a small measure of rice, but keeps a pot that can hold three such measures. Behold the pomp of the Mudaliyar!
|
| ஆற்றிலே போட்டாலும் அளந்துப் போட வேண்டும் |
Although you are throwing it into the river, measure it first
|
| ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது |
Will the word pumpkin make a meal?
|
| திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை |
No man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed
|
| அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு |
A cow eats moving, a house eats standing
|
| அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை |
If separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatred
|
| அங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள் |
If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim Onions, Curry leaves
|
| அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான் |
He is there, he is here, he has share also in the boiled rice
|
| பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல் |
Asking a cat to guard the pot of milk
|
| பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் |
A friend of the cat can't be the guard for the milk
|
| எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம் |
Whatever you are able to secure from a burning house is a gain
|
| சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது |
The cat that has got fire burns will never go near the kitchen
|
| சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம், அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் |
She went to her aunt's house since she had no sari, but her aunt came out wearing a rug made of date palm
|
| மதில் மேல் பூனை போல |
Like a cat on the wall
|
| ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் |
The wolf cried that the sheep got drenched in rain
|
| தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் |
Even if the cold water becomes hot water, it will quench the fire
|
| அறிவே ஆற்றல் |
Knowledge is power
|
| ஆட தெரியாதவள் கூடம் பற்றாது என்றாளாம் |
A bad dancer blames that the stage is not big enough
|
| கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான் |
The all-night dancer watched the east, the all-day labourer watched the west
|
| ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்சாதி கையே |
Though the ghee belonged to the village, it is my wife's hand that is serving the ghee
|
| தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும் |
One's deed will burn him, pancake with evil intention will burn the house
|
| பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு |
Let the sin of killing the cat be with you, and let the sin of eating the jaggery stay with me
|
| அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே அமிர்தமா ? |
When you have poison in the bottom of your tongue, can there be elixir at the tip of the tongue ?
|
| கண்டால் காமாச்சி நாயகர், காணவிட்டால் காமாட்டி நாயகர் |
In front of you they would praise you like a lord. When you are away they would ridicule you as a fool
|
| ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் நொண்டிக்குக் கோபம் |
The bull gets angry when a physically challenged man is asked to mount on it; if the man is asked to get down, he would get angry
|
| எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ? |
Can you ask price for your ghee before buying buffalo?
|
| ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ? |
Would it matter if you cry rolling all over your house that the village is prospering?
|
| குதிரை குருடானாலும், கொள்ளு தின்கிறதில் குறைய ? |
Would the blind horse eat lesser fodder?
|
| பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை |
Neither does he expand in March nor does he get lean in April
|
| அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும் |
If the five(pepper, salt, mustard, cumin, tamarind) and the three(water, fire, fuel) are at hand, even an ignorant girl can cook
|
| இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ? |
What work does a dog have in a blacksmith shop?
|
| ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறும் போனால் துடைப்பக்கட்டை |
Lust for 30 days, desire for 60 days and after 90 days she looks like a broomstick
|
| வேலியில் போகிறதை வேட்டிக்குள் விட்ட கதை |
Picking some wild creature from the bush and packing it in the dhothi (referring to the unwanted activity and its consequence )
|
| பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையை செரச்சானாம் |
Unemployed barber shaves his wife's head
|
| யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்ட கதை |
Asking for limestone from one who is travelling on an elephant
|
| ஆபத்துக்கு பாவமில்லை |
Necessity has no law
|
| எறும்பு ஊறக் கல்லும் தேயும் |
With enough ants creeping, even a stone gets worn out. (With perseverance anything is possible.)
|
| கையில் வெண்ணையை வைத்து நெய் தேடுவது போல் |
Searching for ghee with butter in hand
|
| எள்ளென்றால் எண்ணையாய் நிற்கிறான் |
You ask him for sesame seeds, he's ready with sesame oil. (Be one step ahead.)
|
| விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சலம் போடுவது போல் |
Like a silk tassle for a broom stick. (Similar to "putting lipstick on a pig".)
|
| யானைக்கும் அடி சறுக்கும் |
Even an elephant slips some times. (Even the mighty might fail sometimes.)
|
| பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இருட்டில் எருமைமாடு தெரியுமா? |
He who can't spot a (white) cow in broad daylight can't spot a (black) buffallo in darkness.
|